2025 மே 21, புதன்கிழமை

கடத்தல் குற்றச்சாட்டு: பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 07 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

சிலாபம், கஞ்சிக்குழி பிரதேசத்தில்  விளையாடிக்கொண்டிருந்த ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்றி சென்று அவரை அச்சுறுத்தி வெற்றுக்கடதாசியில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிட்டம்புவ பிரதேச பொலிஸ் நிலைய உயரதிகாரி ஒருவர் தொடர்பில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

தன்னை கடந்த 03 ஆம் திகதி பலாத்காரமாக காரில் ஏற்றிச்சென்று பயமுறுத்தி வெற்றுத்தாளொன்றில் முத்திரை மேல் ஒப்பம் வாங்கியதாக சிலாபம் பொலிசில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டதினை தொடர்ந்து பொலிசார் விசாரனைகளினை ஆரம்பித்தனர்.

இதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பன்னல பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த சம்பவத்துடன் நிட்டம்புவ பிரதேச பொலிஸ் அதிகாரியொருவரும் தொடர்புபட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில், சிலாபம் பொலிசார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .