2025 மே 21, புதன்கிழமை

றிசாத் எமது வேலையில் தலையிடுகிறார்: பாயிஸ்

Super User   / 2013 ஏப்ரல் 08 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் குற்றஞ்சாட்டினார்.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்தளம் நகரில் வாராந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டமை தொடர்பில் நகர சபை தலைவர் கருத்து தெரிவித்தார்.

இதன்போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என்ற குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார்.

புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை புத்தளம் நகர சபை தூரநோக்குடன் செயற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அபிவிருத்தி திட்டங்களினை சில அரசியல் இலாபங்களுக்காக தடைவிதிக்க முற்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாராந்த சந்தையில் சிலர் வீடியோ கெமராவினை வைத்து கொண்டு வியாபாரிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையூறு செய்கின்றனர். இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

எனினும் பொலிஸ் பொறுப்பதிகாரி அமைச்சர் றிசாத்தின் தொலைப்பேசி அழைப்பிற்கேற்கு ஏற்பவே இவ்விடயத்தில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் இந்த நிலை தொடருமாயின் புத்தளம் அரசியல் தலைமைகள் இணைந்து பொலிஸுக்கு எதிராக வீதியில் இறங்கி போரட வேண்டி வரும் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • kanthan Tuesday, 09 April 2013 08:27 AM

    ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம். புத்தளம் நாருது, நகரசபையில் ஊழல். அத பாருங்க சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .