2025 மே 21, புதன்கிழமை

சமூக ஊடகங்கள் தொடர்பில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு வதிவிட செயலமர்வு

Super User   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமூக ஊடகங்கள் தொடர்பில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு கடந்த வார இறுதியில் சிலாபத்தில் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும் எனும் தலைப்பில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட 30 ஊடகவியலாளர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர். இந்த செயலமர்வில் சிரேஷ்ட விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய ஊடக பணிப்பாளர் கிரிஸ்டோபர் டீல் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0

  • jawahira Wednesday, 10 April 2013 03:11 PM

    இதில் புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த 03 ஊடகவியலாளர்களே கலந்து கொண்டதினை படம் காட்டுகிறது. ஏனையோர்??????????????

    உறவினர்களா?????????????

    அப்படியாயின் நாங்களும் கலந்து கொண்டிருக்கலாமே.

    Reply : 0       0

    pradeep Wednesday, 10 April 2013 03:26 PM

    மாவட்டத்தின் முக்கிய ஊடகவியளாலர்கள் 12 பேர் உள்ளனர். அவர்கள் எங்கே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .