2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிசுவை புதைத்த பெற்றோருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தாயும் தகப்பனும் சேர்ந்து சிசு ஒன்றை கொலை செய்து ஐந்து நாட்களுக்கு முன் காட்டினுள் புதைத்தமை தொடர்பாக அவ் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தம்புள்ள ஹபரண காசியப்பாகம என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சிசுவின் தாயான 38 வயதுப் பெண் ஒருவரும் அவரது கணவனும் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபரான பெண்மணியைப் பொலிஸார் விசாரணைக்கு உற்படுத்திய போது தமது சிசுவை கொலை செய்து குழியொன்றில் புதைத்தமை தொடர்பான விபரம் வெளியானது.

மேற்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சுமார் 2 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்விருவரும் கெக்கிராவ பதில் நீதவான் முன்னிலையில்  நேற்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X