2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அநுராபுரத்தில் விசேட பாதுகாப்பு குழு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


அநுராபுரம் நகரில் நடைபெறும் கொள்ளைச்சம்பவங்கள் உட்பட்ட குற்றச்செயல்களை தடுக்குமுகமாக விசேட பாதுகாப்பு குழு ஒன்று வடமத்திய மாகாண முதலமைச்சரினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் உத்தியோகப்பூர்வ ஆம்பிப்பு நிகழ்வு, அநுராதபுரம் ஜயந்தி விகாரையில் இடம்பெற்றது.

பொலிஸாருடன் இணைந்து 24 மணி நேரமும் இக்குழுவினர் பாதுகாப்புச்சேவைகளில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுவோருக்கான சைக்கிள்களும் முதலமைச்சரால் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இவ்வைபவத்தில் ஜயந்தி விகாராதி பதி நுகதன்னே பஞ்ஞானந்த தேரர்,வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன், அநுராதபுரம் நகர மேயர் எச்.பீ.சோமதாச வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத் அபயசிரிகுணவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X