2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டு, கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 14 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கைக்குண்டுடன் கஞ்சா ஒரு கிலோவை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை சிலாபம் பொலிசார் கைது செய்துள்ளனர். சிலாபம் சேதவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே இவ்வாறு நேற்று மாலை கைது செய்துள்ளர்.

சிலாபம் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இவரை சிலாபம் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு தாயரிப்பிலான கைக்குண்டே அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  அக்குண்டானது எவ்வகையினைச் சார்ந்தது என கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் வெளியிடங்களில் இருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து சிலாபம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் விற்பனை செய்து வந்திருப்பதாகவும், கைக்குண்டு ஒன்றினை எதற்காக சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்தார் என்ற விடயம் தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாபம் பொலிசார் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X