2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாத்தாண்டியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

நாத்தாண்டிய, மணிக்கல பிரதேசத்தில் மின் பகிர்வாக்கியின் (ட்ரான்ஸ்போமர்) கம்பத்தில் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்ட சடலமொன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக மாறாவில பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அப்பிரதேசத்தினை சேர்ந்த 46 வயதுடைய டபிள்யு. ஆர்.ரெக்ஸி பெர்ணான்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்ட பின் வெளியில் வந்த இவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாறாவில பொலிசார் மேலதிக விசாரனைகளினை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X