2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தேங்காய் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

60 அடி உயரமான தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு ஏறிய ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

65 வயதான ஒருவரே நேற்று புதன்கிழமை இவ்வாறு  தவறி விழுந்துள்ளதாக ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹேனேபலயாகம, ஹிதோகம பகுதியிலுள்ள வீடொன்றில் காணப்படும் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்து விட்டு இவர் கீழே இறங்கிக்கொண்டிருந்தபோதே தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில், நெலுபாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X