2025 மே 21, புதன்கிழமை

கருவலகஸ்வௌ பகுதியில் ரவைகள் மீட்பு

Kanagaraj   / 2013 மே 20 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுர வீதியின் 12 ஆம் மைல் கல் பிரதேசத்தில் அமைந்துள்ள மதகு ஒன்றின் கீழ் வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு உபகரணங்கள் பலவற்றை கருவலகஸ்வௌ பொலிசார் இன்று திங்கட்கிழமை பகல் கைப்பற்றியுள்ளனர்.

கருவலகஸ்வௌ பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த இடம் பொலிசாரினால் தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது பாவிக்கப்படாத ஆர். பி. ஜி ரக துப்பாக்கிக்கான தோட்டா ஒன்றும், எம். எம். 81 ரக துப்பாக்கிக்கான இரண்டு தோட்டாக்களும், எம். எம். 60 ரக துப்பாக்கிக்கான தோட்டா ஒன்றுடன்,  பாவிக்கப்பட்ட மேலும் சில தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

அவற்றை புத்தளம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X