2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தென்னைமரம் விழுந்ததில் சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

சிலாபம், நாத்தாண்டியா பகுதியில்  தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் 6 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தும்மலசூரிய, சியம்பலாகஸ்ருப்ப பிரதேசத்திலேயே இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவனின் மீது தென்னைமரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இச்சிறுவனை உடனடியாக கல்முருவ வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவன் உயிரிழந்துள்ளான்.

இது தொடர்பான விசாரணையை தும்மலசூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X