2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
வில்பத்து சரணலாய பகுதியிலுள்ள பொன்பரப்பி, பள்ளிவாசல் குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 7 பேரையும் இன்று பிற்பகல் புத்தளம் பதில் நீதவான் அப்துல் காதர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
 
இதன்போது சந்தேக நபர்கள் அனைவரையும் ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
 
இராணுவத்தின் கொமாண்டோ பிரிவும், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர்கள் புதையல் தோண்டிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
 
இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X