2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்,எஸ்.எம்.மும்தாஜ்

மதுரங்குளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்த முந்தல் பொலிஸார், இவரிடமிருந்து 21 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் கடந்த வெசாக் தினத்தின்போது சட்டவிரோதமாக  மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர மதுரங்குளி, செம்புக்குளி பிரதேசத்தில் 45 லீற்றரைக் கொண்ட 2 கான்கள்  சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்ததாக கூறப்படும் பெண் ஒருவரை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் கைதுசெய்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X