2025 மே 21, புதன்கிழமை

வைத்தியரின் விடுதிக்கு அசிட் வீச்சு

Kanagaraj   / 2013 மே 27 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

தப்போவ கிராமிய வைத்தியசாலை வைத்தியரின் விடுதி மலத்தினால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன் விடுதியினுள் வைக்கப்பட்டிருந்த ஆடைகளுக்கும் அசிட் வீசப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் தனது திருமணத்திற்காக 14 நாட்கள் விடுமுறை பெற்று சென்றுள்ளார். விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் விடுதிக்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது விடுதி அசுத்தப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து கருவெலகஸ்வௌ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X