2025 மே 21, புதன்கிழமை

சமூர்த்தி உதவிப்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2013 மே 27 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி உதவிப்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு முந்தல் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட் கிழமை நடைப்பெற்றது.

இதன் போது கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற 23 மாணவர்களுக்கு இவ் புலமை பரிசில்கள் வழங்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்தம் பணத்தொகை வங்கியில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கான நிதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, முந்தல் பிரதேச செயலாளர், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X