2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் மொஹிடீன் ஜும்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மே 28 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மொஹிடீன் ஜும்ஆ பள்ளி வாயலின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களையும் ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் கிளைத் தலைவரையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

புத்தளம் மொஹிடீன் ஜும்ஆ பள்ளியில் நடைப்பெற்;ற இக்கலந்துரையாடலில், புத்தளம் காழி நீதிமன்றம் திறப்பது மற்றும் புத்தளம் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இதன்போது நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து களப்பு ஊடாக ஏனைய மாவட்டங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட உத்தேசித்துள்ள மின்சார திட்டம் தொடர்பாகவும் இத்திட்டம் தொடர்பாக மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் நகர சபை உறுப்பினர் டி.எம்.அமீன், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபைத்தலைவர் முஸம்மில், ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்ட தலைவர் அப்துல்லா ஆலிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X