2025 மே 21, புதன்கிழமை

நன்னீர் மீன் வளர்ப்புக்காக மீன்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மே 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

நன்னீர் மீன் வளர்ப்புக்கென எழுபத்தைந்து ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று திங்கட்கிழமை புத்தளம், தப்போவ குளத்தில் விடப்பட்டுள்ளன.

தப்போவ நன்னீர் மீன்பிடி சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய இம் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் பாரியதொரு குளமாக தப்போவ குளம் காணப்படுகின்றது.

இம் மீன் குஞ்சுகளினை குளத்தில் விடும் நிகழ்வினை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மீன்பிடி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X