2025 மே 21, புதன்கிழமை

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூறவேண்டும்: பொன்சேகா

Kanagaraj   / 2013 மே 28 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஆளும் கட்சியினை மாத்திரம் குறை சொல்லி ஏனையோர் தப்பிவிட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு  எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புத்தளத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைப்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போதுள்ள எதிர்க்கட்சி இந்த ஆட்சியினை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியதும் பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் ஆதரவாளர்களுக்கு சேவை செய்வதற்கே காத்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளிடையே இருக்கின்ற இவ்வாறான நிலைப்பாடு மாற வேண்டும்.

ஆட்சிக்கு யார் வந்தாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக சேவை செய்யவேண்டும்.நான் அரசியல் பற்றி கடந்த காலத்தில் சிந்ததில்லை. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளேன் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X