2025 மே 21, புதன்கிழமை

பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கான்ஸ்டபிள் கைது

Suganthini Ratnam   / 2013 மே 29 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

பெண் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் ஆனமடுவ நீதிமன்ற நீதிபதி விடுவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெண் ஒருவருடன்  தொடர்பு வைத்திருந்ததை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர், ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து குறித்த  கான்ஸ்டபிளை ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் கூறினர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவரின் கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X