2025 மே 21, புதன்கிழமை

போதியளவு நிதியின்மையால் வீதிகளை கண்காணிப்பதில் சிரமம்

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

போதியளவு நிதியுதவி கிடைக்காமையினால் வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீதிகளை வருட முழுவதும் புனரமைக்கவும் கண்காணிக்கவும் முடியாதுள்ளதாக வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் சங்கரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 1947.32 கிலோமீற்றர் வீதிகள் உள்ளன.

அவற்றில் 1500 கிலோமீற்றர் வீதிகளுக்கு தார் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வீதிகள் மண் வீதிகளாகும்.

போதியளவு நிதிகிடைக்காமையினால் இவ்வீதிகளை வருடம் முழுதும் கண்காணிக்கவும், புனரமைக்கவும் முடியாமலுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திகாக 250 மில்லியன் ரூபாவும், வீதிப் புனரமைப்புக்காக 75 மில்லியன் ரூபாவும், 2012ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திகாக 210 மில்லியன் ரூபாவும், வீதிப் புனரமைப்புக்காக 75 மில்லியன் ரூபாவும், இந்த வருடம் வீதி அபிவிருத்திகாக 156 மில்லியன் ரூபாவும், வீதிப் புனரமைப்புக்காக 75 மில்லியன் ரூபாவும் மாகாண சபையினால் கிடைக்கப்பெற்றன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X