2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமை தொடர்பில் விசாரணை

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

திருப்பித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து கடனாக வாங்கிய 10 இலட்சம் ரூபா பணத்தை திருப்பிக் கொடுக்காது நம்பிக்கை மோசடி செய்த சம்பவமொன்று தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதுகட்டு ஹீனகெலே தோட்டத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

தனது அயல் வீட்டுக்கார பெண்ணொருவர் திருப்பித் தருவதாகக் கூறி தன்னிடமிருந்து 10 இலட்சம்  ரூபா பணத்தை வாங்கினார். ஆனால் அப்பெண் இதுவரையிலும் தனது பணத்தை திருப்பித் தராது ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X