2025 மே 21, புதன்கிழமை

இலவசமாக நுளம்பு வலைகள் விநியோகம்

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ரத்மல்யாய பிரதேச மக்களுக்கு இலவசமாக நுளம்பு வலைகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ரத்மல்யாய கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் நான்காயிரத்து ஐனூறு ரூபாய் பெறுமதியான 1500 நுளம்பு வலைகள் ரத்மல்யாய பிரதேசத்திற்கு வழங்கப்படுகின்றது.  இதனால் ரத்மல்யாய பிரதேசத்தின் அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு நுளம்பு வலை கிடைக்கப்பெறுமென பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, பொது சுகாதார அதிகாரிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X