2025 மே 21, புதன்கிழமை

புத்தளம், ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் மூன்று ஆண்டுகள் பூர்த்தி

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளத்தில்; ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடப் பூர்த்தி நிகழ்வும் மூன்று வருடங்களில் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்றோரை கௌரவிக்கும் நிகழ்வு உட்பட பல்வேறு நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றன. 

கல்லூரி அதிபர் ஐ.எல்.சிராஜூதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர சபைத் தலைவரும், விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பகர்தாவுமான  கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

புத்தளத்தில் இயங்கும் தமிழ்மொழிப் பாடசாலைகளின் விஞ்ஞானப் பிரிவை தனியாகப் பிரித்து இந்த விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பலர் வைத்தியதுறைக்கும், பொறியியல்துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

இந்நிகழ்வுடன் கல்லூரிக்கான அலுவலகம், நூலகம், வாசிகசாலை, ஆய்வு கூடம், விளையாட்டு அரங்கு, சுற்றுமதில் என்பன திறந்து வைக்கப்பட்டன.

அத்துடன் கல்லூரியின் இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, மாணவர்களின் குழு செயற்திட்டங்களும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.கமறுதீன், ஏ.எச்.எம்.றியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவு பிரதி கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹிர், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச் செயலாளர் எம்.வை.ஏ.பாவா உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

விஞ்ஞானத்துறைக்கு புத்தளத்தில் பெரும் பங்காற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X