2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கற்பிட்டி- அருகம்பேக்கு இடையில் சீப்ளேன் விமான சேவை

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.முசப்பீர்


கற்பிட்டிக்கும் அருகம்பேக்கும் இடையில் சீப்ளேன் விமான சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்திவருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளின் வசதி கருதி ஹோட்டல்கள் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தீவுப்பகுதிகளை நேற்று  பார்வையிட்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கூறியதாவது,

'எதிர்காலத்தில் எமது நாடு அதிகளவிலான அன்னியச் செலாவணியினை உல்லாசப்பயணிகள் மூலமே எதிர்பார்க்கின்றது.

இதன்டிப்படையில் உல்லாசப் பயண துறைகளினை மேலும் விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.  யாரேனும் இவ்வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்வார்களாயின் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது. 

அவர்கள் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்குரிய முதலீட்டில் 50 வீதத்தை மானியமாக வழங்குவோம்.

அருகம்பேக்கும் கல்பிட்டிக்கும் இடையில் சீப்ளேன் விமான சேவையினை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அருகம்பேக்கு வரும் உல்லாசப் பயணிகள் விரைவிலேயே கற்பிட்டிக்கு வருவதற்கும், கற்பிட்டியில் உள்ளவர்கள் அருகம்பேக்கு செல்வதற்கும் வசதியாக அமையும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .