2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொஸன் வாரத்தில் மதுபான, இறைச்சிக் கடைகளை மூட பணிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பொஸன் வாரத்தில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளையும் இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்;.

மேற்படி காலப்பகுதியில் எவராவது மதுபானமோ அல்லது இறைச்சியோ விற்பனை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதம் 20 – 26ஆம் திகதிவரை பொஸன் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை பொஸன் உற்சவ காலத்தின்போது அநுராதபுரம் புனித பிரதேசத்திற்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் நன்மை கருதி சிறந்த சுகாதார சேவையினை வழங்க பொஸன் உற்சவக் குழு தீர்மானித்துள்ளதாக மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

இதன்படி சிறந்த சுகாதார சேவையினை வழங்கவும் அவசர நிலைமைகளின்போது சிகிச்சை வழங்கும் நோக்கிலும் அநுராதபுரம் பழைய வைத்தியசாலையை இரவு, பகலாக திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X