2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தாயும் மகளும் கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை இந்த மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன நேற்று உத்தரவிட்டார்.

தாய் ஒருவரையும் அவரது மகளையும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தமை மற்றும் தந்தையை வெட்டிக் காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 28ஆம்  திகதி இரவு அநுராதபுரம், அபயபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து தாய், மகள் ஆகியோரை வெட்டிக் கொலை செய்ததாகவும் தந்தையையும் வெட்டிக் காயப்படுத்தியதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X