2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவர் பதவியேற்பு

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.மும்தாஜ்
 
புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவராக நிமல் பமுனு ஆராச்சி இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புத்தளம் நகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
 
புத்தளம் பிரதேச சபையின் தலைவராக இருந்த திலுக் சுசிர பத்திரன கடந்த ஏப்ரல் மாதம் சிலாபத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து அச்சபையின் பிரதித் தலைவராக இருந்த நிமல் பமுனு ஆராச்சி, புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் பிரதேச சபைக்காகப் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்று இச்சபையின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இன்றைய பதவியேற்பு வைபவத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X