2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனமடம் பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களனி, தெலஎள பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன்ன லக்மால் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாக   வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விளைஞர் நேற்று சனிக்கிழமை  தான் பணியாற்றும் நிறுவனத்தின் சக ஊழியர்களுடன் சுற்றுலா மேற்கொண்டு நைனமடம் பிரதேசத்திற்கு வந்து இக்ஹோட்டலுக்கும் வந்துள்ளார். 

இந்நிலையில், இக்ஹோட்டலின் நீச்சல் தடாகத்தில் சக ஊழியர்களுடன் இவர் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று  நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்விளைஞரை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும் இவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X