2025 மே 21, புதன்கிழமை

ஆட்டோ சாரதியின் உடைமையை களவாடியவரை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 16 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகரில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவரின் 86,000 ரூபா பெறுமதியான உடைமைகளை களவாடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை  அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் நகரத்திலுள்ள முச்சக்கரவண்டியொன்றை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சாலியாபுர பகுதிவரை  சந்தேக நபரொருவர் சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபர் இம்முச்சக்கரவண்டியின்  சாரதியை தாக்கியதுடன் அவரிடமிருந்த 72,000 ரூபா பெறுமதியான தங்கமோதிரம், 7,000 ரூபா பணம், 7,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X