2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பிரதேச செயலாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச செயலாளர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை புத்தளம் கல்லடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் கல்லடி பகுதியில், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளமையை கண்டித்து கல்லடி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்பாட்டத்தை கேள்வியுற்று குறித்த இடத்திற்கு சென்றபோதே பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மளிக் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பிரதேச செயலாளரின் சாரதிக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நிலையில் மேற்படி இருவரும் புத்தளம் தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X