2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புத்தளம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால், புத்தளம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் பலவற்றின் கல்விநடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபை ஐக்கிய மக்களி சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X