2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடமாடிய நால்வருக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் தூபாராம பகுதியில் மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடமாடிய நால்வருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து அநுராதபுரம் பதில் கடமை புரியும் மஜிஸ்திராத் சஜீவ குணவர்தன (26)  தீர்ப்பளித்துள்ளார்.

பொசன் வாரத்தினுள் மதுபானம் அருந்த தடைசெய்யப்பட்ட வலயத்தினுள் மதுபானம் அருந்தி அநாகரீகமான முறையில் நடமாடியபோது அநுராதபுரம் தலைமைகப் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மொரட்டுவ, பிலியந்தல, தமுத்தேகம மற்றும் மொரட்டுமுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .