2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மலசலகூட குழியில் மனித எச்சங்கள்

Menaka Mookandi   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மிஹிந்தலை, மஹகனந்தராவ பகுதியிலுள்ள வீடொன்றில் தோண்டப்பட்ட மலசலகூட குழியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புக் கூடுகள் பலவற்றை கண்டெடுத்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை, மஹகனந்தராவ, யாய 1 பகுதியிலுள்ள வீடொன்றில் மலசலகூட குழியொன்றை தோண்டிக் கொண்டிருக்கும் போது நான்கரை அடி ஆழத்தில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மனித எச்சங்கள் என இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X