2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடத்தை முன்னிட்டு நடமாடும் சேவை

Super User   / 2013 ஜூலை 01 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ். எம். மும்தாஜ்


தேசத்திற்கு மகுடம் - 2014 கண்காட்சியினை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் முதலாவது நடமாடும் சேவை புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் இன்று திங்கட்கிழமை; நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் காணி, குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான பதிவு, அடையாள அட்டை மற்றும் வாகன அனுமதி பத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கை உட்பட பல்வேறு விதமான சேவைகளும் நடாத்தப்பட்டது.

இதன் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இவ்வாறான நடமாடும் சேவைகள் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் நடாத்தப்படவுள்ளது.

இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ், மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்காகத் தெரிவாகியுள்ள சிலாபம் முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த மதுவந்தி அலுகொல்ல எனும் மாணவியின் கல்வி நடவடிக்கைக்குத் தேவையான மடிக்கணனி வழங்கப்பட்டது.

இந்த மடிகணணி சனத் நிசாந்த மன்றத்தின் இத்தாலி பொலக்னா கிளையினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினியைக் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சிலாபத்தில் இடம்பெற்றது. வடமேல் மாகாண சபை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா இந்த மடிக்கணினியை குறித்த மாணவிக்கு வழங்கிவைத்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X