2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரும்புத் தொழிற்சாலை முகாமையாளர் மீது தாக்குதல்; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

மாதம்பை, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றின் முகாமையாளரை வாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை சிலாபம் பொலிஸ் நிலைய தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள்  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ள அதேவேளை, இருவர் சரணடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி இந்திய நாட்டவருக்குச் சொந்தமான  பழைய இரும்புகளை உருக்கி மீண்டும் இரும்பு உற்பத்தி செய்யும் இத்தொழிற்சாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது, இத்தொழிற்சாலையின் முகாமையாளரான ஜே.ஏ.ரசிக ஜயவீர என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், இத்தாக்குதல்ச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபரொருவரை கைக்குண்டுடன் சம்பவ இடத்தில் கடந்த 16ஆம் திகதி மாதம்பை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இத்தொழிற்சாலைக்கு அருகில் வாள்கள், பொல்லுகள், மற்றும் தடிகளுடன் சிலர் நிற்பதாக மாதம்பை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸாரைக் கண்ட அங்கிருந்தவர்கள் தப்பிச்சென்றபோது இவர்களில் ஒருவரே கடந்த 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இத்தாக்குதல்ச் சம்பவம் ஒப்பந்தமொன்றின்; அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.  கைதுசெய்யப்பட்டவர்களுள் குறித்த ஒப்பந்தத்தை வழங்கியவரும் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இவர்களிடமிருந்து 650 குதிரை சக்தி வலுக் கொண்ட பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சந்தேக நபர்களை மாதம்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X