2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காற்றுமின் நிலைய காற்றாடியில் தீ

Kanagaraj   / 2013 ஜூலை 05 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம் இஜாஸ்


புத்தளம், முள்ளிபுரம் காற்றுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள காற்றாடிகள் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

15 ஆவது காற்றாடியிலேயே இந்த தீ விபத்து இன்று மாலை  மூன்று மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக கண்டுப்பிடிக்கப்படவில்லை. என்பதுடன் அந்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

காற்றாடி கடும் உயரத்தில் இருப்பதனால் அதில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், சில மணிநேரத்திற்கு பின்னர் அந்த தீ தானாகவே அணைந்துவிட்டது.

இந்த தீ விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X