2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆனமடுவ பிரதேச சபையின் உறுப்பினர் சரண்

Kanagaraj   / 2013 ஜூலை 06 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜுட் சமந்த, எஸ். எம். மும்தாஜ்

வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகின்ற ஆனமடுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் பொலிஸில் இன்று சனிக்கிழமை சரணடைந்துள்ளார்.

பல்லம வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது பல்லம நகரத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையே அவர் பொலிஸில் இன்று சரணடைந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்ற இன்னும் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார். சரணடைந்த சந்தேகநரை நீதவான் முன்னிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X