2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வட மேல் மாகாண சபைத் தேர்தலில் மு.கா தனித்துப் போட்டி

Super User   / 2013 ஜூலை 07 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

வட  மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உயர் பீட உறுப்பினரான எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வட மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை கடையாமோட்டையிலுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் புத்தளம் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் இதன் போது கலந்து கொண்டனர். இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக விஷேட குழு ஒன்றும் இதன்போது நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அடுத்த இரு வாரங்களுக்குள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதேவேளை முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவிடம் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்ட போது 'தான் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்த சில தினங்களில் முடிவு செய்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X