2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அ'புரம் மகாபோதியின் பாதுகாப்பு அதிகரிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 08 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று புகழ்மிக்க அநுராதபுரம் ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புத்தகாயாவிலுள்ள மகாபோதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்தே ஸ்ரீ மகாபோதியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாபோதியின் பாதுகாப்பு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே பாதுகாப்பை அதிகரிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாபோதிக்கு வருகின்ற சகல வாகனங்களும் புதிய வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படும். விசேட விருந்தினர்கள் மற்றும் விசேட அனுமதிபெற்ற வாகனங்கள் மட்டுமே மகாபோதிக்குள் உட்செல்ல அனுமதிக்கப்படும்.

அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக தமிழீழ விடுதலைப்புலிகளினால் 1985 ஆம் ஆண்டு முன்பாக நடத்திய தாக்குதலில் பலர் பலியானார்கள்.

அதனையடுத்து மகாபோதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் 2012 ஆம் திகதிவரையிலும் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X