2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நேசித்த பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தான் நேசித்திருந்த பெண்ணொருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டிச் சாரதியொருவரை நேற்று திங்கட்கிழமை வென்னப்புவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்  இப்பெண்ணை நேசித்திருந்த நிலையில், பின்னர் இவர்கள் இருவருக்கிடையிலான தொடர்பை இப்பெண்ணே துண்டித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வென்னப்புவ தோப்பு பிரதேசத்தில் பஸ் வண்டியை விட்டு தன்னை சந்தேக நபர் இறக்கியுள்ளார். இந்நிலையில், அவ்விடத்தில் தங்கள் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதன்போது சந்தேக நபர் தனது கைகளினாலும் கால்களினாலும் தன்னை தாக்கியுள்ளதாகவும் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் இப்பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தன்னை தாக்கிய பின்னர் அப்பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு தன்னை பலவந்தமாக அழைத்துச் சென்று அங்கு  சந்தேக நபர் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X