2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கருவலகஸ்வௌ பிரதேச சபை தலைவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Super User   / 2013 ஜூலை 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ் எஸ். எம். முஸப்பீர், ஜுட் சமந்த


கருவலகஸ்வௌ பிரதேச சபை தலைவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

நீர்ப்பாசன திணைக்கள காரியாலயத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரினை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கருவெலகஸ்வௌ பிரதேச சபைத் தலைவர் நீல்வீரசிங்க கடந்த கடந்த ஜூலை 4ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனையடுத்து பிரதேச சபை தலைவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X