2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலாசிய பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுற்றிவளைத்த  முந்தல் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது  அங்கிருந்து 300 போத்தல்களில் அடைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானம், 4 போடா பரல்கள், மதுபானம் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .