2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 18 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், முந்தல் பகுதிகளில் நீண்ட நாட்களாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், மறைந்திருந்த சந்தேக நபரொருவரை முந்தல் பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், மீள்நிரப்பு அட்டைகள், பற்றரிகள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேக நபர்; தனது வீட்டுக்கு வந்தபோதே கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் கொத்தான்தீவு மற்றும் பெருக்குவட்டான் பிரதேசங்களிலுள்ள கடைகளை உடைத்து  100,000 ரூபா பணம் உட்பட பொருட்களை கொள்ளையிட்டுள்ளமை தொடர்பில் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .