2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

குளங்கள் புனரமைக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட குளங்களை இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியிடம் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் இதனை மேற்பார்வை செய்யவுள்ளது.

இந்த வருடத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 50 குளங்கள் இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .