2025 மே 15, வியாழக்கிழமை

'இனவாதத்தை பேசியே மு.கா ஆசனங்களை கைப்பற்றியது'

Super User   / 2013 செப்டெம்பர் 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

இனவாத பேச்சுக்களை பேசியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் ஆசனங்களை கைப்பற்றியது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

எனினும் கிழக்கு முதலமைச்சர் பதவி அமீர் அலிக்கு வழங்கக்கூடாது எனும் நிபந்தனையினை மாத்திரமே விதித்து அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாணத்தில் ஆதவளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"முஸ்லிம் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களியுங்கள், முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்பட வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என தெரிவித்து வாக்குகளினை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்று மேற்கூறிய ஒரேயோரு நிபந்தனையுடன் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளது" என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்ததிற்கு ஆதரவளித்து விட்டு புத்தளத்திற்கு வந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் பாவ மன்னிப்பு கேட்கிறது. அந்தளவு தூர திருஷ்;டியற்ற ஒரு தலைமைத்துவமாக அந்த கட்சியின் தலைமைத்துவம் மாறியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களினை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தளம் நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .