2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

அனல் மின் நிலையத்தினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல்

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடும் விசேட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் களப்பினூடாக மின்சாரத்தினை வெளிமாவட்டதிற்கு கொண்டு செல்வதினால் புத்தளம் பிரதேச மீனவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இது தொடர்பில் ஆராய்வற்காகவே விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மின் சக்தி அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் விக்டர் அன்டனி, மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச சபை தலைவர் பமுனு ஆராச்சி, புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ, மற்றும் புத்தளம் பிரதேச மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டம் தொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கப்படுத்தப்பட்டதுடன் மீனவர்களினால் அவர்கள் எதிர்பார்;க்கப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் விளக்கப்படுத்தப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .