2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரியை மோதியவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வீதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த மேற்படி நபர் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோதே, அவரைக் கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த  பொலிஸ் உத்தியோகத்தர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே விபத்திற்கு உள்ளானார்.

ஆராச்சிக்கட்டுப் பிரதேசத்தில் வேகமாகச் செல்லும் வாகனங்களை பிடிக்கும் நடவடிக்கையில் நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது மிக வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் சைகை காட்டியுள்ளார். இருப்பினும் அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை மோதிவிட்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில்,  அங்கிருந்த ஏனைய பொலிஸாரும் பொதுமக்களும் சேர்ந்து குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவரை மடக்கிப் பிடித்து கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்  கைதுசெய்யப்பட்டபோது இவர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .