2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாண கூட்டுறவு விற்பனை அமைச்சராக பேஷல ஜயரத்ன

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண கூட்டுறவு விற்பனை, உணவு, சிறு கைத்தொழில், கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பேஷல ஜயரத்ன நேற்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமத்திய மாகாண கல்வி, தகவல் தொழிநுட்ப, கலாசார  அமைச்சராக செயற்பட்ட பேஷல ஜயரத்ன, அவ்வமைச்சிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மாகாண அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

சத்தியப்பிரமாண நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் சந்திரா கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • saffna Thursday, 07 November 2013 05:14 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .