2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

புத்தளம் நகர சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2013 நவம்பர் 29 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.  நகர பிதா கே.ஏ. பாயிஸ் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் 2014ஆம் ஆண்டுக்கான மொத்த உத்தேச வருமானம் 644,638,266.73 ரூபாவாகவும் மொத்த உத்தேச செலவு 644,613,724.68 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது.

புத்தளம் நகர சபையின் வரவு செலவு திட்டத்தை ஆளுங் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் அதரித்து வாக்களித்தனர். இதனால் இந்த வரவு செலவு திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .