2025 மே 09, வெள்ளிக்கிழமை

பெண் துஷ்பிரயோகம்: ஐவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

உடப்பு பிரதேசத்தில் 19 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் ஐவரும் முந்தல் பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இன்றைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர்,  தன்னுடைய தங்கைக்கு முடி வெட்டவென சலூனுக்கு செனறுள்ளார். அப்போது அப்பெண்ணின் காதலனுடன் மேலும் 04 பேர் இணைந்து தன்னை பலாத்காரமாக வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என பொலிஸில் முறையிட்டிருந்தார்.

அதற்கமைய பொலிசார் குறித்த சந்தேக நபர்களை  தேடி வலை விரித்திருந்தனர். அதனடிப்படையிலேயே தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்களை உடப்பு பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவருவதாக முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X