2025 மே 09, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் பலி; மேலும் இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
 
ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனமடு நவகத்தேகம வீதியின் மெருங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் வடத்தை சியம்பலாகஸ்ஹேன எனும் பிரதேசத்தைச் சேர்ந்த நாமல் சாந்த தசநாயக்க (வயது 29) எனும் இளைஞரே உயிரிழந்தவராவார்.
 
மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியோ இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞனும் காயங்களுக்குள்ளான இருவருமாக மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் நவகத்தேகம திசையிலிருந்து ஆனமடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளதுடன், எதிர்த் திசையில் வந்த சிறிய ரக லொறி ஒன்றுடன் இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் உடனடியாக ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி ஆனமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X